மாசி பூஜை தொடங்கியதும் சபரிமலையில் குவிந்த பக்தர்கள்... 4 மணி நேர காத்திருப்புக்கு பின் தரிசனம்...!
Devotees throng Sabarimala Masi Puja begins Darshan after 4 hours waiting
மண்டல–மகர விளக்கு காலத்தைத் தாண்டியும், மாதாந்திர பூஜை நாட்களிலும் கூட சபரிமலை பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. மாசி மாத சிறப்பு பூஜைகளை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி நடை திறந்த தருணத்திலிருந்தே, ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இடைவிடாமல் சந்நிதானம் நோக்கி திரண்டு வருகின்றனர்.

மேலும், கேரளத்தில் பொதுவேலைநிறுத்தம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு இருந்தபோதிலும், “சுவாமியே சரணம் ஐயப்பா” என முழங்கிய பக்தர்கள் வருகை குறையவில்லை.
இந்த தடைகளை தாண்டியும், இருமுடி கட்டிய உறுதியுடன் மலையேறிய அவர்கள், பக்தியின் தீவிரத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக நேற்றைய தினம் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் நடந்த பதி பூஜை ஆன்மீக அதிர்வை ஏற்படுத்தியது. அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த அரிய தரிசனத்தில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றனர்.
மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில், காவலர்கள் ஒழுங்குமுறையில் பக்தர்களை அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
இந்த ஆன்மிக அலை மேலும் சில நாட்கள் தொடர உள்ளது. வரும் 17ஆம் தேதி இரவு 10 மணியுடன் நடை சாத்தப்பட்டு மாசி மாத பூஜை நிறைவு பெறுகிறது.
English Summary
Devotees throng Sabarimala Masi Puja begins Darshan after 4 hours waiting