தினம் தினம் திருநாளே... இன்றைய ராசிபலன்.. எந்த ராசிக்கு பணவரவு உண்டாகும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

தன்னிச்சையாக எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். 

ரிஷபம்:

பணி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.  இழந்த பொருட்களை மீட்பதற்கான தன உதவிகள் கிடைக்கும்.  உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும்.

மிதுனம்:

இணையதளம் சார்ந்த துறையில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். கால்நடைகளால் இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். விவாதம் புரிதலில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.

கடகம்:

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.  பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். முயற்சியால் சேமிப்புகள் உயரும். வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்தி உண்டாகும். 

சிம்மம்:

தாய்வழி உறவுகளிடம் நிதானத்துடன் இருக்கவும்.  சம வயதினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி பணியில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் நம்பிக்கை அதிகரிக்கும்.

கன்னி:

மனதில் தைரியம் மற்றும் நிதானத்துடன் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது எச்சரிக்கை வேண்டும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். 

துலாம்:

செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். பேச்சுக்களால் இலாபம் அடைவீர்கள். புதிய உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். 

விருச்சகம்:

புதிய சிந்தனைகள் மேலோங்கும். போட்டிகளில் ஈடுபடும் போது கவனமாக இருத்தல் வேண்டும். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள்  கிடைக்கும். கூட்டாளிகளிடம் தேவையற்ற விவாவதங்களை தவிர்ப்பது நன்று. திட்டமிட்ட முயற்சிகளால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனதில் புதுமையான லட்சியங்களை உருவாக்குவீர்கள்.

தனுசு:

தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவதால் சாதகமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். 

மகரம்:

இடையூறுகள் நீங்கி சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். சொத்துச்சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆதரவால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். 

கும்பம்:

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளிவட்டாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுப்புகள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.

மீனம்:

பணிபுரியும் இடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான தகவல்கள் வந்தடையும். இறைவழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

apr 08 rasipalan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal