ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்.?! செய்யக்கூடாது.!!
Adi month not good for functions
ஆடி மாதத்தில் செய்யக்கூடிய மற்றும் செய்யகூடாத விஷயங்கள்:
1.ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாமா?
ஆடி மாதத்தில் தாலிப்பிரித்து கோர்க்கலாம்.
2.ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்யலாமா?
ஆடிப்பெருக்கு அன்று கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
3.ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தால் நல்லதா? கெட்டதா?
ஆடி வெள்ளிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தை பிறப்பது சிறப்பாகும்.

4.ஆடி மாதம் வளைகாப்பு வைக்கலாமா?
ஆடி மாதம் வளைகாப்பு செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
5.ஆடி மாதம் மொட்டை அடிக்கலாமா?
ஆடி மாதம் மற்றும் வருட தொடக்கத்தில் மொட்டை அடிப்பதை தவிர்த்து மற்ற நாட்களில் அடிப்பது உத்தமம்.
6.ஆனி மாதம் மொட்டை அடித்து, ஆடி மாதம் காது குத்து வைக்கலாமா?
குலதெய்வம் வெளியூராக இருக்கும் பட்சத்தில் இவ்விதம் செய்யலாம் தவறில்லை. ஆனால், உள்ளூராக இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் செய்வது உசிதமாகும்.

7.ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்யலாமா?
ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பாகும்.
8.ஆடி மாதம் பெண் பார்க்க செல்லலாமா?
ஆடி மாதம் பெண் பார்க்க செல்வதை தவிர்த்து மற்ற மாதங்களில் செல்லலாம்.
English Summary
Adi month not good for functions