சனியின் மூன்று சுற்று... மனிதனை பிடிக்கும் சனி என்னென்ன?
3 sani palankal
கிரகப்பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் சனிப்பெயர்ச்சி காலத்தில் எல்லோருடைய மனதிலும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறதோ? நம்மை எவ்வாறு வாட்டி வதைக்கப்போகிறதோ? என்று சிந்தனை எழும்.
நவகிரகங்களின் பெயர்ச்சியில் சனி பெயர்ச்சிக்கு அதிகம் பயப்படுகின்றார்கள். ஏனெனில் சனி ஒரு ராசிக்கு 2½ ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார். இந்த காலக்கட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனிபகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்.
பொதுவாக ஒருவரது வாழ்நாளில் மூன்று முறை ஏழரைச் சனி வரும். இந்த சனியை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஏழரைச் சனி சிலரை படுத்தி எடுக்கும். சிலருக்கு பதவியை கொடுக்கும். உண்மையில் ஏழரைச் சனி என்பது ஒரு மனிதன் எதிர்காலத்தில் நல்லவிதமாக வாழ்வதற்கான அனுபவங்களையும், பணம் என்றால் என்ன? என்பதைப் பற்றிய நேரடி அனுபவத்தையும் தருகின்ற ஒரு அமைப்பு. எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த
மனிதர்களை பிடிக்கும் சனி என்னென்ன?
ஏழரைச் சனி என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிகழும். இந்நிகழ்வில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று எனப்படும் மங்கு சனி, பொங்கு சனி, மரணச்சனி என மூன்று சுற்றுக்கள் இருக்கும்.
மங்கு சனி :
இளம் பருவத்தில் எதையும் தாங்கி கொள்ளக்கூடிய சூழ்நிலையில் சனிபகவான் தரும் அடி சற்று மெதுவாகவே விழும். இந்த முதல் சுற்றுக்கு மங்கு சனி என்று பெயர். மிக முக்கியமாக இந்த காலத்தில் ஒரு மனிதர் ஏழரைச் சனியின் கெடுபலன் தாக்கத்தை உணர்வது இல்லை. இன்னும் சொல்லப் போனால் சிலருக்கு அதீதமான பொருள் வரவும் கிடைக்கவே செய்கிறது.
பொங்கு சனி :
வாலிபத்தின் நடுவில் வரும் இரண்டாவது சுற்று பொங்கு சனி ஆகும். ஜாதகரின் இதர கிரக அமைப்புகளை பொறுத்து இதன் ஆட்சி அவ்வளவு கடுமையாக இல்லாமல் சற்று கூடக்குறைய இருக்கும். ஒரு சிலருக்கு பொங்கு சனி விடைபெறும்போது மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்து விட்டு செல்லும். ஏழரைச் சனியின் நடுப்பகுதி கொஞ்சம் சவாலான நேரம். இது பொங்கு சனி காலமாக இருந்தாலும் முறையான பரிகாரங்கள் செய்யாவிட்டால் படுத்தி எடுத்துவிடும்.
மரணச்சனி :
இந்த சுற்றில் ஒரு ஜாதகருக்கு நிச்சயம் உடல் நலிவு ஏற்படுத்தும் மற்றும் மரணத்திற்கு இணையான துயரங்களை அனுபவிக்க வேண்டி வரும். தசை மற்றும் புத்தி இவைகள் ஜாதகருக்கு, சாதகமற்று இருக்கும் சூழலில் நிச்சயம் மரணம் கூட சம்பவிக்க நேரிடும். அந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிவடைந்து இறைவனை சரணாகதி அடைவார்கள்.