இன்றைய தினப்பலன்கள்... இன்று... இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் அமோகம்... உங்களுக்கு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது சேமிப்பை மேம்படுத்தும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணியில் உயர் அதிகாரிகளிடம் பேசும் பொழுது நிதானத்துடன் செயல்படவும்.  செலவுகள் மேம்படும் நாள்.

ரிஷபம்:

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான  செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  அமைதி வேண்டிய நாள்.

மிதுனம்:

உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்கள் செயல்பாடுகளில் கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும்.  தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

கடகம்:

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபமும், அலைச்சலும் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.  திறமைகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும்.  விரயம் நிறைந்த நாள்.

கன்னி:

இளைய சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் சாதகமான சூழல்நிலைகள் உண்டாகும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.  சுகம் நிறைந்த நாள்.

துலாம்:

 எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.  உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.  தன்னம்பிக்கை மேம்படும் நாள்.

விருச்சிகம்:

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் சிலருக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். தோற்றப்பொலிவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனை, வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  அறிமுகம் மேம்படும் நாள்.

தனுசு:

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள்  உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றம் ஏற்படும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும்.  அமைதி நிறைந்த நாள்.

மகரம்:

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கலை சார்ந்த அறிவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  புகழ் நிறைந்த நாள்.

கும்பம்:

ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்கின்ற தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும்.  ஆதரவு நிறைந்த நாள்.

மீனம்:

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.  அமைதி நிறைந்த நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

27 jan rasipalan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->