இன்று சிறப்பான பலன்கள் பெறும் ராசிகள் - இன்றைய ராசிபலன்கள்.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

உடன்பிறந்தவர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வேலையாட்களை மாற்றம் செய்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அனுகூலமான நாள்.

ரிஷபம்:

குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்:

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டிய நாள்.

கடகம்:

வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் சிலருக்கு கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

சிம்மம்:

சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்திலுள்ள பெரியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உங்களின் இலக்கை நோக்கிய சிந்தனை மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.

துலாம்:

உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பொருளாதார ரீதியாக ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்களின் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்காலம் சம்பந்தமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். திடீர் திருப்பங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.

தனுசு:

வாழ்க்கைத்துணைவருடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு கோபப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். அமைதி வேண்டிய நாள்.

மகரம்:

நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள்.

கும்பம்:

தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பணி சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சாந்தமான நாள்.

மீனம்:

எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். முன்னேற்றமான நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 nov rasipalan


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal