இன்றைய தினப்பலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேலோங்கும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. புதிய வியாபாரம் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்:

வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வியாபார முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

கடகம்:

மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.

சிம்மம்:

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் காணப்படும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். செலவுகள் நிறைந்த நாள். 

கன்னி:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. அன்பு நிறைந்த நாள்.

துலாம்:

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும்.  தன்னம்பிக்கையான நாள்.

விருச்சிகம்:

உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும்.  எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். செய்யும் முயற்சிக்கேற்ப வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும்.  உதவிகள் கிடைக்கும் நாள்.

தனுசு:

செய்யும் முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆசைகள் அதிகரிக்கும்.  கீர்த்தி நிறைந்த நாள்.

மகரம்:

கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த பண வரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை காணப்படும். சஞ்சலமான நாள்.

கும்பம்:

வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் இருந்துவந்த கவலை நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள். 

மீனம்:

குடும்ப உறுப்பினர்களிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 dec rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->