இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உற்சாகமான நாள்.. இன்றைய (23-08-2022) ராசி பலன்கள்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

எந்தவொரு செயல்பாட்டிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் அமையும். தேர்ச்சி நிறைந்த நாள்.

ரிஷபம்

தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும்.  உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மிதுனம்

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. ஆர்வம் நிறைந்த நாள்.

கடகம்

பணிபுரியும் இடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.

சிம்மம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான விஷயங்களில் தெளிவு பிறக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.

கன்னி

இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

துலாம்

சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் அலைச்சலும், புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நன்மையான நாள்.

விருச்சிகம்

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

தனுசு

வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மகரம்

பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் மேம்படும். வர்த்தகம் சார்ந்த பணியில் இருப்பவர்கள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். செல்வாக்கு மேம்படும் நாள்.

கும்பம்

நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதிலிருக்கும் கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

மீனம்

பூர்வீக சொத்துக்களில் மாற்றம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகள் முன்னேற்றத்தை உருவாக்கும். அசதிகள் குறையும் நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23.08.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->