தினம் தினம் திருநாளே... இன்றைய தினம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வெற்றியை தரும்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். மனதை உறுத்திக்கொண்டு இருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் கிடைக்கும். விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

ரிஷபம்:

போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

மிதுனம்:

செய்தொழிலில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனை விருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். எதிர்பார்த்த சில செயல்பாடுகள் தாமதமாக நிறைவேறும். பயணங்கள் தொடர்பான செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

கடகம்:

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான தனவரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுபவிரயம் நிறைந்த நாள்.

சிம்மம்:

திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மையும், அனைவரிடத்திலும் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மனதில் இருக்கும் எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

கன்னி:

செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பிடிவாத சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சோர்வு நிறைந்த நாள்.

துலாம்:

மனதில் நினைத்த காரியங்கள் நினைத்த விதத்தில் நடைபெறும். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எந்தவொரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை காணப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கருத்து வேறுபாடுகள் நிறைந்த நாள்.

தனுசு:

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். பொதுமக்கள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் அமையும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மைகள் நிறைந்த நாள்.

மகரம்:

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

கும்பம்:

சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் மற்றும் உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். விருப்பம் நிறைவேறும் நாள்.

மீனம்:

சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பயணம் மற்றும் செயல்பாடுகளில் நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

01 dec rasipalam


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->