அது கோலி, தோனிக்கு இல்லை! அது சில பாகிஸ்தான் பக்கிகளுக்கு நான் கொடுத்த பதிலடி! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை 2023 தொடரின் ஒரு ஆட்டத்தின்போது,  முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கெளதம் கம்பீர் குறித்த ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலானது.

அந்த காணொளியில் காம்பிர் வரும்போது விராட்கோலி ரசிகர்கள் சிலர் கோலி, கோலி, டோனி, டோனி என கூச்சலிடவே, அப்போது காம்பிர் ஒரு திசையை நோக்கி தனது கை விரல் மூலம் பதிலடி கொடுக்கிறார்.

இந்த காணொளி சர்ச்சையான நிலையில், இதுகுறித்து காம்பிர் தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், "சமூக ஊடகங்களில் காட்டப்படும் காணொளியில் உண்மை இல்லை, ஏனென்றால் ஒருசிலர் தாங்கள் எதை திட்டமிட்டு மறைத்து காட்ட விரும்புகிறார்களோ அதைக் காட்டுகிறார்கள். 

வைரலான அந்த வீடியோவின் உண்மை என்னவென்றால், அங்கு 2-3 பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் பற்றி இந்தியாவுக்கு எதிரான விஷயங்களையும், விஷயங்களையும் கோஷமாக எழுப்பினார்கள்.

அவர்களுக்கு எதிராவே, அவர்களை நோக்கியே நான் அந்த இடத்தில் என் எதிர்ப்பை பதிவு செய்தேன். அது என் இயல்பு, என் எதிர்வினை. 

நான் என் நாட்டிற்கு எதிராக எதையும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நீங்கள் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை விடமுடியுமா என்ன? அது என் எதிர்வினை..." என்று காம்பிர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viral video during Asia Cup 2023 Gautam Gambhir


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->