"திமுகவினர் சம்பாதித்த ஹவாலா பணத்தை மீட்போம்": திமுக-வை வறுத்தெடுத்த எடப்பாடியார்!
EPS at Ambattur Will Seize Hawala Funds and Return to People
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" பிரச்சாரத்தின் கீழ் அம்பத்தூரில் (183-வது தொகுதி) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விகளை மிகக் கடுமையாகச் சாடினார்.
ஹவாலா மிரட்டல் & குடும்ப ஆட்சி:
திமுக அமைச்சர்கள் ஹவாலா வழக்குகளில் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக அமைச்சர் கே.என்.நேரு மீதான பணி நியமன முறைகேடு (ரூ.30-35 லட்சம்/பணி) புகாரைச் சுட்டிக்காட்டினார்.
"மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், திமுகவினர் சம்பாதித்த ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்து மக்களிடமே திருப்பித் தருவோம்" என அதிரடி காட்டினார்.
டாஸ்மாக் 'விஞ்ஞான' கொள்ளை:
டாஸ்மாக் மதுபாட்டில்களுக்குக் கூடுதலாக வசூலிக்கப்படும் ரூ.10 மூலம், கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.24,000 கோடி "விஞ்ஞான ரீதியாக" கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அவர் கணக்குப் பட்டியலிட்டார்.
யார் துரோகி?
"ஸ்டாலின் தான் துரோகி; மாணவர்களையும் இளைஞர்களையும் சீரழித்தவர் அவர்தான்" எனத் தன்னை 'துரோகி' எனச் சொன்ன முதல்வருக்கு ஈபிஎஸ் பதிலடி கொடுத்தார்.
அதிமுக-வின் பொற்காலம்:
கஜா புயல், கொரோனா கால நிர்வாகம், அம்மா உணவகம், மற்றும் மாணவர்களுக்கான ஆல்பாஸ்/ஆன்லைன் வகுப்பு போன்ற அதிமுக அரசின் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.
கடன் சுமையை ஏற்றிவிட்டு நிதியைத் தங்களுக்குத் தேவையானவர்களுக்குத் திருப்புவதாகவும், வறுமை ஒழிப்பு என்பது வெறும் காகிதப் பேச்சு என்றும் அவர் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவைச் சாடினார்.
English Summary
EPS at Ambattur Will Seize Hawala Funds and Return to People