காங்கிரசின் பொறுக்கிகளுக்கு தக்க பாடம் புகட்டிய பாரத மக்கள் - ஹெச் ராஜா!
bjp h raja condemn to dmk congress
பாஜக ம்மொத்த தலைவர் ஹெச்.ராஜா விடுத்துள்ள கண்டன செய்தியில், "பொறுக்கிகளுக்கு தக்க பாடம் புகட்டிய பாரத மக்கள்!
செக்கிற்கும் சிவலிங்கத்திற்கு வித்தியாசம் தெரியாத காங்கிரசின் பொறுக்கிப் படை, பல நாட்டுத் தலைவர்கள் பங்குபெறும் டெல்லி AI உச்சி மாநாட்டில் சட்டையை கழற்றி சண்டியர்த்தனம் செய்ய முயன்று, அங்கிருந்த பார்வையாளர்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள். தேவையா இந்த அசிங்கம்? சட்டமன்றத்தில் சட்டையை கிழிப்பது அல்லது அரசு நிகழ்வில் சட்டையை கழற்றிக் கொண்டு திரிவது இதெல்லாம் ஒரு பிழைப்பா?
கொள்கை ரீதியாக பாஜகவின் பலத்தோடு மோத முடியவில்லை என்பதால், நமது நாட்டிற்கு எதிராக எந்த கேவலத்தையும் செய்யத் துணிந்துவிட்டது
காங்கிரஸ் அதற்கு சுருதி மாறாமல் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது திமுக இவ்விரண்டு தீயக் கட்சிகளையும் அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தியே தீரவேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக் கொண்டு உழைப்பதால் தான், மக்கள் மூன்றாவது முறையாக எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறார்கள்.
காழ்ப்புணர்வு கண்களை மறைக்க, நமது தாய்நாட்டை களங்கப்படுத்த துணிந்த திரு. ராகுல்காந்திக்கு பிரதமராக மட்டுமல்ல, இனி ஒரு கவுன்சிலராகக் கூட மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp h raja condemn to dmk congress