ரீல்ஸ் மோகம்! சாலையில் கிடந்த பிணம்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நடிப்பு! வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசத்தில்  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல் என்ற தொழில்நுட்பம் உள்ளது. அதில் கோடி கணக்கான மக்கள் அவர்களுக்கு விருப்பமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் அதிக  பார்வையாளர்களை பெறுவதற்காக சிலர் விபரீதமான வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரின் ரயில்களில் சிக்கியோ பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிர்களை இழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்க்காக சாலையில் பிணமாக படுத்து உயிரிழந்தது போல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்றுள்ளார்.

சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பதை அப்பகுதிமக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அங்கு வந்த போலீசார் முக்கேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh police arrested a man who pretended to be a dead body in the middle of the road for Instagram reels


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->