முதல்வர் மு.க ஸ்டாலின் உகாதி வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் உகாதி  பண்டிகையை புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறார்கள்.

உகாதி பண்டிகையை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும்நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான திரு.ஸ்டாலின் சமூகவலைத்தளமான x- தளத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு உகாதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் , 

தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உகாதி - புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

புத்தாண்டு புதிய தொடக்கங்களுக்கு வித்திடட்டும்! தென்னகத்தின் உரிமைகள் மீட்கப்பட்டு நமக்குரிய வரிப்பகிர்வைப் பெறும் ஆண்டாக அமையட்டும்.

என வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ugadi greetings from Chief Minister Stalin


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->