சிரிப்போ சிரிப்பு! நாய்க்கு பயந்துதான் இப்டி ...!- OLA பைக் முன்பதிவு செய்த பெண்...! - Seithipunal
Seithipunal


தனியார் பைக், டாக்சி சேவைகள் போன்று, தற்போது நகரப்பகுதிகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய ஏகுவாக வந்துவிட்டது.

இதில் குறிப்பிட்ட தூரம் பயணம் செய்ய அதனை பலரும் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்திருந்தது இணையத்தில் சமூக வலைதளத்தில்ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

மேலும், அந்த பெண் நாய்களுக்கு பயந்து 180 மீட்டர் தூரம் மட்டுமே செல்ல ஓலா(OLA ) பைக் பதிவு செய்து பயணம் செய்துள்ளார்.இதுகுறித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவில், "இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார். அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என வினவுகிறார்.

அதற்கு அந்த பெண் அருகில் தான் எனக்கூறி இடத்தை சொல்கிறார். உடனே ஓலா பைக் டிரைவர் மேப்பில் அந்த இடத்தை பார்த்த போது, இந்த இடம் மிகவும் அருகில் தான் உள்ளது. அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள்? என கேட்கிறார்.

அதற்கு அந்த பெண், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு பயந்து தான் ஓலா புக் செய்ததாக தெரிவிக்கிறார்". இதைக்கேட்ட டிரைவர் சிரிப்பது போல் காட்சிகள் உள்ளது.இது தற்போது இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.
 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This because she was afraid dog woman who booked an OLA bike


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->