ரஜினியின் ட்விட்டில் என்ட்ரி கொடுத்த உதயநிதி.. மல்லுக்கட்டும் ரஜினி ரசிகர்கள்.!! 
                                    
                                    
                                   Rajinikanth twit comment by Udhayanidhi Stalin Rajinikanth fans got angry 
 
                                 
                               
                                
                                      
                                            நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் ஆனது, பல தரப்பிலிருந்தும் காவல்துறைக்கு கண்டனங்களை பெற்று வருகிறது. தந்தை, மகனின் மரணத்திற்கு பல தரப்பில் இருந்து நீதி கேட்டு போராட்டங்கள் மற்றும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. 
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் நேரடியாக களத்தில் இறங்கி விசாரணை செய்து வரும் சூழலில், நீதிபதியையே மிரட்டும் வகையில் காவல் துறை அதிகாரி பேசியிருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 இது குறித்த ட்விட்டர் பதிவில், " தந்தையும் மகனையும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை, மனித இனமே எதிர்த்து கண்டித்து பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது... சத்தியமா விடவே கூடாது " என்று கூறியுள்ளார்.
இதனைக்கண்ட உதயநிதி ஸ்டாலின், " தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழகம் முதலவரை எழுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி..
இதை ‘சின்ன இஷ்யூ’வாக நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு, ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் சட்டப் பணியில் தங்களை உண்மையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பிரதமரையும், அவர் தலைமையிலான அரசையும் கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறியுள்ளார். இதனைக்கண்ட ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பிற்கு உள்ளாகி, திமுகவின் பல விஷயங்களை பதிவு செய்து வருகின்றனர். 
 Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Rajinikanth twit comment by Udhayanidhi Stalin Rajinikanth fans got angry