இன்ஸ்டாவில் கோடிக்கணக்கில் வருமானம் - ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய பிரியங்கா சோப்ரா! - Seithipunal
Seithipunal


பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். இந்தத் தளத்தை ஒரு பொருளையும் பிராண்டையும் விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்தி பல பிரபலங்களும் கோடி கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். 

ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களுக்கு இருக்கும் புகழ், இன்ஸ்டாகிராமில் அவர்களைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வைத்து இந்த பிராண்டுகளை அவர்களை அணுக அதற்கேற்ப அவர்களும் அந்தப் பொருளை விளம்பரப்படுத்தத் தங்களது சம்பளத்தை முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில், டாப் லிஸ்டில் இருக்கும் பாலிவுட் பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் மூன்று கோடி ரூபாயை சம்பாதிக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 89.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இவருக்கு அடுத்து தீபிகா படுகோனே உள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் மூலம் 1.5 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஷ்ரதா கபூர் 1.18 கோடி ரூபாயும் அலியா பட் ஒரு கோடி ரூபாயும் ஷாருக்கான் 80 லட்ச ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanga chopra instagram income


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->