தெய்வமே எல்லாம் உங்க செயல்தானா?.. செயல்தலைவர் நிலைமை?.. நெட்டிசன்கள் கலாய்.! - Seithipunal
Seithipunal


நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு வைகோ - நாராயணசாமி சந்திப்பும் ஒரு காரணம் என்று கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியானது நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த ஆட்சிக்கு திமுக மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்து இருந்தனர். இந்நிலையில், உட்கட்சி விவகாரத்தால் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்கள் 4 பேர் ராஜினாமா செய்தனர். 

தனவேலு எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ராஜினாமா காரணமாக நாராயணசாமி தலைமையிலான பாண்டிச்சேரி அரசு பெரும்பான்மையை இழந்தது. தற்காலிக ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மற்றும் ஜனநாயக சட்டப்படி பெரும்பான்மையை நிரூபணம் செய்ய கால அவகாசம் வழங்கியிருந்தார். 

நேற்று, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜ் பவன் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், திமுக எம்எல்ஏ வெங்கேடசன் தனது பதவியை ராஜினாமா செய்தனர். இதன் மூலம் காங்கிரஸ் - திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்தது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம் 14 ஆக உயர்ந்தது. 

இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூடிய நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்து அவையில் இருந்து வெளியேறி சென்றார். 

பாண்டிச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் ரீதியில் காங்கிரஸ் - திமுக இடையே எதிர்கருத்துக்கள் இருந்து வந்த நிலையில், அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்துள நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு முதல் மூன்று மாதமே உள்ளதால் ஆளுநர் ஆட்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக அரசியல் களத்தில் நெட்டிசன்களால் ராசியில்லாத அரசியல்வாதியாக கருதப்படும் வைகோவை மேற்கொள்காண்பித்து, நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு வைகோ - நாராயணசாமி சந்திப்பும் ஒரு காரணம் என்று கூறி புகைப்படத்தை பதிவு செய்து ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இது தொடர்பான பதிவுகள் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Narayanasamy Govt Dismiss Issue Social Media Trend Vaiko with Narayanasamy Meme


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal