திமுகவின் தில்லாலங்கடி வேலை.. அரங்கேறிய கொலை முயற்சி.. தொடரும் அட்டூழியங்கள்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் கொசூர் கிராமத்தை சார்ந்தவர் தங்கவேல். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலமாக ஏரிகள், கால்வாய்கள் மற்றும் குளங்களை தூர்வாரி வந்தது. 

இதே தருணத்தில், தி.மு.க கட்சியின் சார்பில் நமக்கு நாமே திட்டம் துவங்கப்பட்டு, தி.மு.கவின் சார்பாகவும் ஏரி, குளங்களை தூர்வாரி வந்தனர். அந்த நேரத்தில், மேற்கூறிய தங்கவேல் ஜே.சி.பி வாகனத்தை சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்தார். தி.மு.க கட்சியிலும் நிர்வாகியாக இருந்துள்ளார். 

இவரை அணுகிய திமுக நிர்வாகிகள், கொசூர் நாதிபட்டி குளத்தை தூர்வார வேண்டும் என்றும், தலைவர் ஸ்டாலின் வருகிறார், தளபதி வருகிறார் என்றும் வீரவசனம் மற்றும் ஆசாபாசம் கொண்ட வார்த்தையை பேசி குளத்தை தூர்வார கூறியுள்ளனர். இதனையடுத்து இரண்டே நாட்களில் குளம் தூர்வாரப்பட்டுள்ளது. 

இதற்க்காக தனது ஜே.சி.பி மற்றும் மேலும் இரண்டு நபர்களின் ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர், டிப்பர் லாரி என வாடகைக்கு வாங்கி தங்கவேல் குளத்தை தூர்வாரி கொடுக்க, கடந்த 2017 ஆம் வருடம் மே மாதம் 17 ஆம் தேதி அங்கு வந்த திமுக தலைவர் குளத்தை தி.மு.க சொந்த செலவில் தூர்வாரியது போல கூறினார்.

இதன்பின்னர், குளத்தை தூர்வாரிய செலவு தொகை என்று ரூ.1.5 இலட்சம் கேட்டு அன்றைய கொசூர் திமுக ஊராட்சி செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட தி.மு.க இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் மகாலிங்கத்திடம் கேட்டுள்ளார். 

இந்த பணத்தை கரூர் தி.மு.க அமைப்பாளர் செந்தில் பாலாஜியிடம் இருந்து பெற்று கொடுப்பதாக கூறிய நிலையில், ஒரு வருடம் ஆனது தான் மிச்சம். இறுதியாக வரும்கால முதல்வர் ஆட்சிக்கு வந்ததும் தந்துவிடுவோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தங்கவேல் தி.மு.கவில் இருந்து விலகி, கடந்த 2018 ஆம் வருடத்தில் அ.தி.மு.க கட்சியில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க மகாலிங்கத்திற்கு எதிர்தரப்பில் நின்ற வேட்பாளருக்கு ஆதரவாக இருந்து, தி.மு.க மகாலிங்கத்தை தோற்கடித்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த 24 ஆம் தேதியன்று மகாலிங்கத்திடம் மீண்டும் பணம் கேட்கவே, மனைவியின் பிரசவ தேதியும் நெருங்கி வந்ததால் பணம் கொடுத்து உதவ கூறி கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஏற்க மறுத்த மகாலிங்கம், " தி.மு.கவில் இருந்தாலே பணம் வராது.. நீ அ.தி.மு.கவில் தற்போது இருக்கிறாய்... உன்னால் முடிந்தால் வாங்கிக்கொள் " என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல் தனது முகநூல் பக்கத்தில், ஸ்டாலின் ஜே.சி.பி இயந்திரத்தில் இருந்து இறங்கிய போது கடந்த 2017 ஆம் வருடம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்து, " ஒரு தரித்திரம் பிடித்த ** என் வண்டியில் கால் வைத்தான்.. ஆறே மாதத்தில் டியூ கட்டமுடியாமல் வண்டியையே இழந்துவிட்டேன் " என்று கூறியிருந்தார்.

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த மகாலிங்கம் மற்றும் தி.மு.க ஆதரவு உடன் பிறப்புக்கள் சேர்ந்து கொசூர் கடை வீதியில் இருந்த தங்கவேலை அரிவாளால் வெட்டி, கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தங்கவேல், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து காவல் துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur ADMK Party Member Ex DMK Member Murder attempt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->