கண்டா வரச்சொல்லுங்க, அங்கே இடிமுழங்குது கருப்பசாமி கோட்டையிலே.. சந்தோஷை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! - Seithipunal
Seithipunal


சந்தோஷ் நாராயணன் இசையமைத்த, "கண்டா வரச்சொல்லுங்க" பாடல் பஞ்சாயத்து சர்ச்சையில் சிக்கியுள்ளது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படத்தின் அறிமுக பாடல், ஐயப்பன் சுவாமி பாடலைக் கேட்டது போல இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இது தொடர்பான குற்றச்சாட்டில் சந்தோஷ்நாராயணன் சிக்கியுள்ளார். 

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர், தற்போது தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ள இந்த கர்ணன் படம், தற்போது முதல் பாட்டிலேயே சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

தமிழ் திரை உலகில் யாருமே பறையிசைனை பயன்படுத்தியது இல்லை என்பதை போல, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவிற்கே டப் கொடுக்கும் அளவில் பறையிசையை க்ளோசப்பில் வைத்து, நார்மல் குரலில் இல்லாமல் புதிய அவதாரம் எடுத்து, சூரரைப்போற்று சூர்யா போல வேற லெவலில் பாடல் பாடிய சந்தோஷ் நாராயணன், ஓப்பனிங் பாடலை சாமி பாட்டில் இருந்து சுட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 

கர்ணன் படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூட்யூபில் மாபெரும் வரவேற்பை பெற்றாலும், இந்த பாட்டின் உண்மையான உரிமத்தை வைத்துள்ளவர் கிராமிய பாடகர் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் என்பது தெரியவந்துள்ளது. 

அவரது ஐயப்ப சுவாமியின் கண்டா வரச்சொல்லுங்க மணிகண்டன் என்ற வாசகம், இங்கு கண்டா வரச்சொல்லுங்க கர்ணனை என மாற்றப்பட்டுள்ளதும், அங்கே இடிமுழங்கு கருப்பசாமி கோட்டையிலே என்ற பாடலின் மெட்டுகளையும் என சுட்டு கர்ணனுக்கு மாஸ் ஏற்றியுள்ளது உறுதியாகியுள்ளது என ஆணித்தரமாக நெட்டிசன்கள் அடித்து கூறி வருகின்றனர். 

இசைமெட்டு மற்றும் வரிகள் தொடர்பாக சர்ச்சை எழலாம் என்ற எண்ணம் முதலிலேயே வந்துவிட்டது என்பதை போல, பாடல் காட்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக தேக்கம்பட்டி சுந்தராஜன் குழுவினருக்கு நன்றி தெரிவித்து பாடல் ஆரம்பிக்கப்படும் நிலையில், என்றுதான் இந்த காபி பேஸ்ட் சர்ச்சை தீரும் என தலையில் கைவைத்து உள்ளூர் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnan Movie Kanda Varasollunga Song Original Rights by Thekkampatti Sundarrajan Samy Song


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மூன்றாவது ஒரு கூட்டணி உருவாகினால்., யாருக்கு பாதிப்பு.,?
Seithipunal