தோனி மீண்டும் வேண்டும்.. போர்களமாகும் ட்விட்டர்.. ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்.!! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான (அக்டோபர் 2019 முதல் 2020 செப்டம்பர்) கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. இதன் படி கிரிக்கெட் வீரர்கள் 3 தரவரிசையில் கீழ் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் முதல் உயர் தர வரிசையில் (A+) இருக்கும் நபர்களுக்கு ரூ.7 கோடி சம்பளமும், முதல் தர வரிசையில் (A) உள்ள நபர்களுக்கு 5 கோடியும் வழங்கப்படுகிறது. 

இதனைப்போன்று இரண்டாம் (B) தர வரையில் இருக்கும் நபர்களுக்கு 5 கோடியும், மூன்றாம் (C) தர வரிசையில் இருக்கும் நபர்களுக்கு 1 கோடி சம்பளமும் வழங்கப்படுகிறது. 

இதில் முதல் உயர் தரவரிசை பட்டியலை பொறுத்த வரையில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதல் தர வரிசையை பொறுத்த வரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், சேடேஸ்வர் புஜாரா, அஜிங்யா ரஹானே, கே.எல்.ராகுல், ஷிக்கர் தவான், மொஹம்மது சமி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோர் உள்ளனர்.  

இதனைப்போன்று இரண்டாம் தர வரிசையில் வ்ரிடதிமன் சாஹா, உமேஷ் யாதவ், யூஸ்வேந்திர சாஹல், ஹர்டிக் பாண்டியா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோரும், மூன்றாம் தரவரிசை பட்டியலில் கேதர் ஜாதவ், நவதீப் சைனி, தீபக் சாஹர், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, சரத்துள் தாகூர், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அறிக்கையில் தோனியின் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில், தோனி போட்டிகளில் பங்கேற்காததால் அவருடைய பெயர் அறிவிக்கப்படவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அன்று இந்திய அணிக்கு பலம் வாய்ந்த நபராக இருந்த தல தோனியின் பெயரை பிசிசிஐ நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டு பெரும் ஆத்திரத்திற்கும், மன வருத்தத்திற்கும் உள்ளான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறாக தல தோனியின் ரசிகர்கள் #ThankYouDhoni மற்றும் #MSDhoni என்ற வாசகத்தின் கீழ் பல ட்விட்டர் பதிவுகளை நேற்று தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.. இன்றும் அதனைப்போன்று #DhoniWeNeedYou என்ற ஹாஷ்டேக்கில் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in social media trending about dhoni


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->