சாலையில் இறந்து கிடந்த நாய்.. யானையின் நெகிழ்ச்சி செயல்.. வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சாலையில் அடிபட்டு இறந்துகிடந்த நாயை மிதிக்காமல் யானை ஒன்று ஒதுங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

பொதுவாக தங்களின் சுய தேவைகளுக்காக விலங்குகளை தீ வைப்பது, கட்டி இழுத்துச் சென்று கொடுமைப்படுத்துவது, அடித்து கொலை செய்வது என்று பல தீங்குகள் மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்பட்டு வருகிறது. 

தங்களை காப்பாற்ற சில நேரங்களில் தனது உடல் பலத்தால் மனிதர்களைத் தாக்கி, விலங்குகள் தங்களை பாதுகாத்துக் கொள்கிறது. இதுஒருபுறம் இருந்தாலும் சிங்கத்தின் அரவணைப்பில் மான் அன்புடன் வாழ்ந்து வரும் வீடியோ காட்சிகளும், சிங்கக் குட்டியை யானை துதிக்கையால் தூக்கி செல்லும் புகைப்பட காட்சிகளும் பாசபந்தத்திற்கு மதிப்பளித்து பெரும் வைரலாகி வந்தது. 

இந்நிலையில், சாலையோரம் அடிபட்டு கிடந்த நாயை அவ்வழியாக பாகனுடன் சென்ற யானை, நாயை மிதிக்காமல் பின்னால் வரும் வாகனத்தை பார்த்து சாலையில் சிறிது தூரம் சென்று கடந்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elephant Respect to Died Dog on Road Feeling Video Trending Social Media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal