குட்டி யானையின் செல்லத்தனமான சுட்டித்தன குறும்புகள்.. காப்பாளரை வம்பிற்கிழுத்து விளையாடும் அழகு.! - Seithipunal
Seithipunal


யானை குட்டி ஒன்று யானை காப்பாளரிடம் சுட்டித்தனமான சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் சில சமயங்களில் சிறு சிறு சேட்டைகள் செய்து, நமக்கு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். அந்த வகையில், செல்லப்பிராணிகளை போல இருக்கும் குழந்தை தனமான குணம் காட்டு விலங்குகளுக்கும் உள்ளது. 

யானை என்றால் பெரிய அளவிலான உருவம் கொண்ட விலங்கு என்றாலும், அதன் மனதில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே புரியும். இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சியில், ஒருவர் பெண் யானை இருக்கும் வளையத்திற்குள் மண்ணை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். 

அப்போது அங்கிருந்த குட்டியானை, காப்பாளரை பணி செய்ய விடாமல் வம்பிழுத்து செல்லமான சேட்டைகள் செய்கிறது. யானையை விரட்டுவது போல் நடித்து தனது பணியை தொடர்ந்தாலும், அந்த குட்டி தொடர்ந்து தனது குறும்புத்தன சேட்டைகளை செய்கிறது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elephant Make Funny moments Video Trending Social Media 9 April 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal