குற்ற உணர்ச்சியே இல்லையா ரங்கராஜ்? என் குழந்தைக்காக எந்த எல்லைக்கும் போவேன்..ஜாய் கிரிஸில்டா கண்ணீர் மல்க பேட்டி!
Donot you feel guilty Rangaraj I will go to any lengths for my child Joy Grisylda tearful interview
சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான சர்ச்சை நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
ரங்கராஜ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, அவற்றை தடுக்கவும், வெளியான வீடியோக்களை நீக்கவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜாய் கிரிஸில்டா தனது பங்குதார நிறுவனமான “மாதம்பட்டி தங்கவேலு பிரைவேட் லிமிடெட்” குறித்து பேசினார் என்பதாலும், கடந்த 15 நாட்களில் நிறுவனம் 12.5 கோடி ரூபாய் இழப்பு சந்தித்ததாகக் கூறி தனியே மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜாய் கிரிஸில்டா கண்ணீர் கலந்த குரலில், "என் குழந்தைக்காகத்தான் நான் போராடிக் கொண்டு இருக்கிறேன். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன். உயிரில்லாத பணத்திற்காக வழக்கு தொடர்கிறார், ஆனால் உயிருள்ள எனக்கும், என் குழந்தைக்கும் இதுவரை பதில் சொல்லவில்லை.
20 நாட்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், காவல்துறை என்னுடைய வழக்கை எங்கும் ஏற்காமல் ஒரே ஸ்டேஷனிலிருந்து மற்றொரு ஸ்டேஷனுக்கு மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது என் வழக்கு எந்த ஸ்டேஷனில் இருக்கிறது என்பதே தெரியவில்லை," என்று அவர் வலி வெளிப்படுத்தினார்.
மேலும்,"நான் எந்த பொய்யான தகவலையும் பரப்பவில்லை. என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி தான் தந்தை என தான் சொன்னேன். அதைத்தான் சமூக வலைதளத்தில் பகிர்ந்தேன்.
தவறு செய்தவர்கள் ஜாலியாக வெளியிலிருக்கிறார்கள். ஆனால், உண்மையைச் சொன்ன பெண்ணை அவமானப்படுத்துகிறார்கள்.பல யூடியூப் சேனல்கள் என்னை குறை சொல்லி பேசுகின்றன. யார் சொல்லித் தூண்டுகிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்.
பெண்களைப் பற்றித் தவறாக பேசுவோர், அவர்களுடைய வீட்டிலும் அம்மா, அக்கா, தங்கை, மனைவி என பெண்கள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்," எனக் கண்கலங்கி பேசியுள்ளார்.இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி பல்வேறு வாத–பிரதிவாதங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.
English Summary
Donot you feel guilty Rangaraj I will go to any lengths for my child Joy Grisylda tearful interview