மருத்துவர் ராமதாஸ் குறித்து எக்ஸ் தளத்தில் அவதூறு பரப்பிய இளைஞர்..கைது செய்து சிறையில் அடைப்பு!! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய எடப்பாடி சேர்ந்த இளைஞர் போலீசரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் ஊர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பாமக குறித்தும் பாமக தலைவர்கள் குறித்தும் அவதூறு பரப்புவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். சமீபத்தில் நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகைப்படத்தை கேலியாக சித்தரித்து சமூகவலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட அந்த பதிவை கண்டு மன உளைச்சல் அடைந்த பாமகவினர் மற்றும் சேலம் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தலைமையில் எடப்பாடி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து எடப்பாடி போலீசார் கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Doctor Ramadoss x app Youth who spread slander arrested and imprisoned


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->