டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ தனது பதவியை ராஜினாமா செய்தார்.. இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்.!!
CEO of Twitter has resigned from his post
ட்வீட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
உலகின் முக்கிய நிறுவனமாக விளங்கும் ட்வீட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஜாக் டோர்சி. ட்வீட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஆகவும் இருந்தார். இதனிடையே ட்வீட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ட்வீட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியை ஜாக் டோர்சி ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து தனது ஊழியருக்கு ஜாக் டோர்சி எழுதிய கடிதத்தில், கடந்த 16 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் முதல் தலைமை நிர்வாக அதிகாரி வரை. நிர்வாக தலைவர், இடைக்கால சிஇஓ என பல பொறுப்புகளில் பணியாற்றி பிறகு இது நான் வெளியேறுவதற்கான நேரம் என முடிவு செய்துள்ளேன். ட்வீட்டர் அதன் நிறுவனர்களிடம் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராக உள்ளது என நம் நான் நம்புவதாலேயே எனது ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஜாக் டோர்சி பதிலாக ட்வீட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆக உள்ள பராக் அகர்வால், புதிய சிஇஓவாக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியரான பராக் அகர்வால், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் விரைவில் ட்விட்டர் போர்ட் உறுப்பினராக பராக் அக்ரவால் பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
English Summary
CEO of Twitter has resigned from his post