2K கிட்ஸ்களுக்கு செக் வைத்த இன்ஸ்டகிரம்.. இனி இவர்கள் பயன்படுத்த தடை.? - Seithipunal
Seithipunal


18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுப்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது .

அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளையும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளின் மூலமாக அன்றாட உரையாடல்கள் மற்றும் முக்கியமான தகவல்களை  பகிர்ந்து வருகின்றனர். தற்போது, இந்த செயலிகளுக்கு சிலர் அடிமையாகவே மாறிவிட்டனர். 

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இல்லாத சிறுவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அனைத்து சிறுவர்களும் போலியான பிறந்த தினத்தை கொடுத்து இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிவிடுகின்றனர்.

அதனால் சிறுவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் சமூக வலைதளங்கள் நல்லது மட்டுமல்லாமல், தவறானவற்றையும் கற்றுக் கொடுக்கிறது.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டின்டர் போன்ற சமூக வலைதள செயலிகள் சிறுவர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை. ஆனால் விதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி, இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Below 18 years old not use Instagram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->