எம் புலிகள் தீவிரவாதிகளா?.. வீரர்களடா அவர்கள் - அமேசானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளிக்கும் தமிழர்கள்.! - Seithipunal
Seithipunal


அமேசான் நிறுவனம் என்றாலே சர்ச்சை என்ற அளவுக்கு தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு விஷயங்களில் தலையிட்டு வருகிறது. இந்தியாவின் இறையாண்மை, கொள்கை போன்ற விஷயங்களிலும் அது தலையிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் இந்திய தெய்வங்கள் மற்றும் இந்தியாவின் வீரவணக்கம் செலுத்து மரியாதைக்குரிய நபர்களை அவதூறாக சித்தரித்து வியாபாரம் பார்த்து வந்தது. 

தற்போது, அந்த நிலையை கொஞ்சம் மாற்றி இந்திய ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் பொருட்டு சில வெப் சீரிஸ்களை எடுத்து பெரும் கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட தாண்டவ் வெப் சீரிஸ் சர்ச்சையில் அமேசான் சிக்கிய நிலையில், தற்போது தமிழர்களின் தலையில் பேரிடியை இறக்கி வைத்துள்ளது. 

அமேசான் பிரைம் வீடியோவில் வெப் சீரிஸ் என்ற பெயரில் பேமிலி மேன் (Family Man) என்ற தொடர் படமாக்கப்பட்டு வெளியப்பட்டது. இந்த வெப் சீரிஸ் கதைக்களம் மும்பையை மையமாக கொண்டு பயணித்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த தொடரின் இரண்டாவது பாகமாக Family Man 2 எடுக்கப்பட்டது. இந்த வெப் சீரிஸ் தற்போது சர்ச்சையை சந்தித்துள்ளது. 

இந்த வெப் சீரிஸின் இரண்டாவது பாகம் தொடர்பான ட்ரைலர் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் சமந்தா இலங்கை தமிழராக மற்றும் விடுதலை புலியாக நடித்துள்ளதாக தெரியவருகிறது. மேலும், ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் அடையாளத்துடன் அவர் தோன்றி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதலைப்புலிகளை அமேசான் என்ற கார்ப்பரேட் (**பிரட்) தீவிரவாதியை போல சித்தரித்து இருப்பது போல காட்சிகள் அமையப்பெற்றுள்ளது. 

மேலும், இந்த வீடியோவில் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் குற்றவாளிகள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இலங்கை நாட்டில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாக எதிராக போராடி, சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு உயிர் தியாகம் செய்த வீரர்கள் என நெட்டிசன்கள் அமேசான் நிறுவனத்தை சுட்டிக்காட்டுகின்றனர். அங்கு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், பாலியல் குற்றங்கள் என அனைத்தையும் கூறி அமேசான் நிறுவனத்திற்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர்.

ஈழத்தில் நடந்த பிரச்சனை என்ன என்று தெரியாமல், தமிழர்களையும் - இலங்கையில் உள்ள என் ஈழத்தமிழ் சகோதர - சகோதரிகளையும் வன்முறையாளர்கள் போல, ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகள் போல் சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளது தவறான செயல் எனவும் சுட்டிக்காண்பித்து தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த விசயத்திற்கு அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்டு, இரண்டாவது பேமிலி மேன் தொடரை வெளியிடக்கூடாது அல்லது கதைக்களத்தை மாற்ற வேண்டும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும், தமிழனுக்கு என தனியொரு வீரம், பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, அவன் வாழ்வில் சந்தித்த இன்ப துன்பங்கள் என பல இருக்கிறது. தேவையில்லாமல் அமேசானின் பண இலாபத்தை எங்களின் உணர்ச்சியுடன் இணைத்து எங்களை கொந்தளிக்க வைக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazon Prime Video Family Man 2 Web Series Against Tamil Peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->