சட்டமன்ற தேர்தலில் சீட்டை மாற்றிக்கொடுக்க பிளான்?.. அமைச்சருக்கு ஆப்படிக்க பரபரப்பு திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி நிர்வாகிகளுக்கு களப்பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். கட்சியில் நல்ல பெயரை பெற்று, சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு பலரும் போட்டிபோட்டு வரும் நிலையில், தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் கழுத்தில் மாலையுடன் நடந்து வரும் அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ், சட்டமன்ற தேர்தலை கணக்கில் எடுத்துக்கொண்டு களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் செல்லும் இடமெல்லாம் முதலிலேயே ஏற்பாடு செய்யப்பட்ட ஒலிபெருக்கிகள் என்று, இவர் வரும் போது சரியாக எம்.ஜி.ஆரின் பாடலை பதிவு செய்து ஆதரவாளர்கள் பெரும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றனர்.

சிறிய அளவிலான நிர்வாகியின் இல்லத்திற்கு சென்றாலும் சரி, அரசின் நலத்திட்ட உதவிகள் அல்லது ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்ய செல்லும் நிகழ்ச்சிக்கும் இதனைப்போலவே தடபுடலாக வரவேற்பு வழங்கப்படுகிறது. மேலும், வரும் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக களமிறங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து கோகுலம் தங்கராஜிடம் பேசுகையில், " மக்களின் ஆர்வம் காரணமாக இது நடந்தது. எம்.ஜி.ஆரை போல நான் இருக்க முடியுமா?.. இது போன்ற வரவேற்புகள் தமிழக முதல்வர் மற்றும் துணை முதலாவருக்கு அளிக்க வேண்டும். கொரோனா காலத்தில் 60 ஆயிரம் குடும்பத்திற்கு, ரூ.1.5 கோடி செலவில் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான் என்பதை போல, இப்போது அமைதியாக இருந்துவிட்டு அதிமுக தலைமையில் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கேட்டாலும், வெற்றியை வைத்து அமைச்சர் பதவி கேட்டாலும் சந்தேகத்திற்கு இடமில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும், விருதுநகர் மாவட்டத்தை பொறுத்த வரையில் பல தொகுதிகள் இருந்தாலும், சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக கட்டாயம் கோகுலம் தங்கராஜுக்கு சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பளித்து, அதிமுக அமோக வெற்றியை பெற்று அவருக்கே அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Party Member Gogulam Thangaraj Plan to MLA Candidate Virudhunagar Consultancy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->