காதலித்த பள்ளி மாணவி..கண்டித்த பெற்றோர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிபட்டினம் பகுதியில் பதினாறு வயதுள்ள சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாணவி அதே பகுதியில் வசிக்கும் ஆண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோரை விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents restricted to school girl love


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal