வெங்காயம்–பூண்டு விவகாரம்...! - 11 ஆண்டுகள் வழக்கின் முடிவில் தம்பதிக்கு விவாகரத்து! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவரின் வாழ்க்கையில் 2002ல் திருமணத்துடன் புதிய அத்தியாயம் தொடங்கியது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, கேசவின் மனைவி உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்காத சைவ முறையில் சமையல் செய்யத் தொடங்கியது.

இந்த மாற்றம் கேசவின் வீட்டில் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியது.வீட்டார் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், கணவன்–மனைவி இடையே சிறு தகராறுகள் பெரிய மோதல்களாக மாறின.

இறுதியில் கருத்து வேறுபாடு உச்சத்தை எட்டியதால், கேசவின் மனைவி தங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.இதையடுத்து 2013ஆம் ஆண்டு கேசவ், மனைவியுடன் இணைந்து வாழ முடியாது என்ற காரணத்தால் அகமதாபாத் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்தை வழங்கி, மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கை ஆய்வு செய்த குஜராத் உயர் நீதிமன்றமும் முதன்மை தீர்ப்பை நிலைநிறுத்தி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி விடுத்தது.

வெங்காயம்–பூண்டை தவிர்த்த சமையல் காரணமாக 11 ஆண்டுகள் நீண்ட குடும்ப பிரச்சனை இறுதியில் விவாகரத்துடன் முடிவடைந்த இந்த வினோத சம்பவம், இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Onion Garlic Affair Couple gets divorced after 11 years litigation


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->