நண்பனின் மனைவி என்றும் பாராமல் வீட்டில் புகுந்து இளைஞர் மோசம்.!
illegal affair in nagar kovil
நாகர்கோவில் மாவட்டத்தில் இருக்கும் மார்த்தாண்டம் என்ற பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கட்டிட தொழிலாளியான இளைஞருடன் நட்பு வைத்துள்ளார். இருவரும் தொழில் சம்பந்தமாக அடிக்கடி விவாதிக்க கட்டிட தொழிலாளி வீட்டிற்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் கட்டிட தொழிலாளியின் மனைவிக்கும், இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருக்கின்றது. வீட்டில் இல்லாத நேரத்தில் பூட்டிய வீட்டிற்குள் கட்டிட தொழிலாளியின் மனைவி அந்த இளைஞனுடன் தனிமையில் இருந்துள்ளார்.

பூட்டிய வீட்டிற்குள் இருவர் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து கட்டிட தொழிலாளியிடம் தெரிவித்துள்ளனர். எனவே, அவர் தன்னுடைய மனைவியை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால், சிலநாட்களிலேயே அவருடைய மனைவி வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். மேலும், அந்த இளைஞரையும் காணவில்லை.
இதனால் பதறி அடித்த கட்டிட தொழிலாளி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் தீவிர விசாரணையில் இருவரையும் கண்டு பிடித்தனர்.
தாய் இல்லாமல் தன்னுடைய குழந்தைகள் அழுவதை கண்டா கட்டிடத் தொழிலாளியின் மனைவி தன்னுடன் கணவருடன் செல்வதாக வாக்களித்துள்ளார். பின்னர் இருவருக்கும் அறிவுரை வழங்கி காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
illegal affair in nagar kovil