மதுபானம் அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால் நிலைமை என்னவாகும்?.. தம்பதிகளே உஷார்.! - Seithipunal
Seithipunal


தாம்பத்திய விஷயங்களில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளது. சிலர் தங்களின் நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூறினார்கள் அல்லது நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று தாம்பத்திய வாழ்க்கையை சில காலங்களில் இழந்தும் தவித்து வருகின்றனர். அதுபோன்ற நிலை எதிர்காலத்தில் பெருமளவு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தற்போதே எச்சரிக்கை விட தொடங்கிவிட்டனர். ஏனெனில் கலாச்சாரம் என்ற பெயரில் பல விஷயங்களில் ஏற்றமும், இறக்கமும் ஏற்பட்டு வருகிறது.

அன்று உடல் உழைப்பால் கலைத்து, சுத்தமான சோமபானத்தை அருந்திய பலரும் உடல் திடகாத்திரத்துடன் இருந்து வந்தார்கள். நல்ல மற்றும் இயற்கையான உணவுகளை எந்த விதமான கூச்சமும் இன்றி சாப்பிட்டு வந்தார்கள். தங்களின் மனைவியை / கணவனை காலத்தின் இறுதி வரை அன்போடும், பண்போடும், தம்பதியத்தோடும் பார்த்துக்கொண்டு இன்பமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றோ கைநிறைய சம்பளம் வாங்கினாலும் நேரமின்மை, பணியிட அழுத்தம் என்று பல பெயரில் சரியாக உணவு கூட சாப்பிடுவது இல்லை. 

சரி ஒருநேர உணவையாவது உருப்படியாக உண்ணுவர்களா? என்றால் அதுவும் கிடையாது. பாஸ்ட் புட் என்ற பெயரில் ரசாயனம் கலக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டுவிட்டு, இரசாயன கெமிக்கல் போட்டு தயார் செய்யப்பட்ட மலிவு விலை மதுபானங்களை வாங்கி குடித்துவிட்டு அரைபோதையில் திரிவது நடக்கிறது. இன்றுள்ள படித்த பெண்களும், ஆண்களும் தங்களின் மன அழுத்தத்தை குறைக்க பப் மற்றும் மதுபான விடுதிகளுக்கு சென்று உற்சாகமாக ஆட்டம் ஆடி வருவதாக எண்ணி அவர்களின் வாழ்க்கையை அழித்து வருகின்றனர்.

தருணும் - அகல்யாவும் (எடுத்துக்காட்டுக்காக பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது) புதுமண தம்பதிகள். இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி, அதிக ஊதியம் பெறுபவர்கள். நவீன வாழ்க்கை முறை இவர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதை போல, பார்ட்டிகளுக்கு சென்று குடிப்பது, தினமும் மதுபானம் அருந்தாமல் உறங்குவது கிடையாது, வாரத்தின் இறுதி நாட்களில் பப்களில் சென்று குடித்துவிட்டு கும்மாளம் போடுவது என தொடர்ந்து வந்துள்ளனர். 

மேலும், தம்பதிகள் இருவரும் மதுபானம் அருந்திவிட்டு தங்களுக்குள் தாம்பத்திய உறவுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். மதுபோதையில் கிடைத்த தாம்பத்திய சுகம், அரைபோதை மயக்கத்தில் மூளையில் ஏற்படுத்திய மாயை என்பதை கூட உணராமல் பலமணிநேரம் தாம்பத்தியம் கொண்டார் போல எண்ணிக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். உள்ளூர் மதுபானம் முதல் உலக அளவிலான மதுபானம் வரை அருந்தி ஒரு வருடம் தாம்பத்தியம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

சரியாக 8 முதல் 9 மாதத்தில் தருணின் ஆண்குறியின் விறைப்புத்தன்மை குறைந்துபோக, தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அகல்யாவுக்கு தாம்பத்தியத்தில் விருப்பமில்லாத மனநிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் 95 விழுக்காடு இருக்கும் ஆசை, 15 விழுக்காடாக குறைந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கும் போது, மதுபானம் அருந்தி தாம்பத்தியம் மேற்கொள்வதை தம்பதி தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் கூறிய அறிவுரைக்கு பின்னர் பெரிய தவறு செய்துவிட்டோம் என்று தம்பதிகளின் புத்தியில் ஆணி அடித்தார் போல உணர்ந்துள்ளது.

மது மதியை மட்டுமல்ல, தாம்பத்தியத்தின் ஆர்வத்தையும் சிதைக்கும் என்பதே நிதர்சனம். மதுவினால் மனத்தடை குறைகிறது என்பது ஒருபுறம் 64 விழுக்காடு உண்மையாக இருந்தாலும், தாம்பத்திய விஷயங்களில் மது மிகப்பெரிய எதிரி ஆகும். தொடர் மதுபானம் அருந்தினால் அவர்கள் தாம்பத்தியம் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் எதிர்காலத்தில் விறைப்புத்தன்மை, தாம்பத்திய வெறுப்பு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். மதுபானம் அருந்திவிட்டு தாம்பத்தியம் மேற்கொண்டால், மதுவின் மயக்கத்தால் அந்த நேரம் அதிக சுகம் கண்டது போல இருக்கும். ஆனால், அது உண்மையல்ல. வெறும் 8 மாதத்தில் வெத்து டப்பி ஆகிவிடும்.

இரு கிளிகளும் இயற்கையாக இணைந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் இன்பம்.. அற்ப போதைக்காக அரக்கப்பரக்க ஆவேசமாக உல்லாசமாக இருந்தால், உங்களின் கிளி ஒருநாள் கட்டாயம் மடிந்துபோகும் (தாம்பத்திய ஆசை குறைந்துவிடும்) என்பதை நினைவில் வையுங்கள். சந்தேகங்கள் இருந்தால் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்றுக்கொண்டு, மதுபோதை தாம்பத்திய ஆசைகளில் இருந்து விடுபடுங்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If Couple Have Alcohol Sexual Activity It Will Dangerous to They Future Life


கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?Advertisement

கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?
Seithipunal