கணவன், மனைவிக்கிடையே சண்டையா? இந்த பூஜையை செய்தால் ஒற்றுமை அதிகரிக்கும்...!! - Seithipunal
Seithipunal


கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுப்படுத்த முயற்சிக்கக்கூடாது. ஆரோக்கியமான மற்றும் ஆழமான உறவுகளுக்குள் சண்டைகள் வருவது என்பது இயல்பான ஒன்று தான்.

சண்டைகள் எப்போதுமே உறவை மேம்படுத்துவதாகவும், விவாதங்கள் எப்போதுமே ஆரோக்கியமான நல்ல விவாதங்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் அடிக்கடி கணவன், மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன நிறைவு மற்றும் மன மகிழ்ச்சியை கொடுக்கும்.

ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன், மனைவிக்குள் அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது. ஒற்றுமை இல்லை என்றால் அதற்கு ஆன்மிக ரீதியாக என்ன வழிபாடு செய்யலாம்? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை விரதம் :

இந்த பூஜையை வாரந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும். வீடு மற்றும் பூஜையறையை சுத்தம் செய்துவிட்டு, முருகனின் திருவுருவ படத்தை வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். 

பூஜையறையில் மா இலையை வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபத்துக்கு பக்கத்தில் ஒரு பூவை வைத்துவிடுங்கள். இந்த தீபத்தை முருகப்பெருமானை முழுக்க முழுக்க மனதில் நினைத்துக் கொண்டு, குடும்ப ஒற்றுமைக்காக ஏற்ற வேண்டும். 

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும், சண்டையும் வரக்கூடாது என்ற வேண்டுதலை அந்த முருகப்பெருமானிடம் வையுங்கள். அப்படியே சண்டை சச்சரவுகள், வாக்குவாதம் வந்தாலும், உங்களுடைய குடும்பத்திற்காக, 'உங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை வர வேண்டும் என்று முருகனிடம் மனமுருகி வேண்டுதலை வையுங்கள்."

சுயநலம் பார்க்காமல், நம்முடைய குடும்பத்திற்காக, நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதார, இந்த பூஜையை தொடங்கிய நாள் முதலில் இருந்தே உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைய ஆரம்பித்துவிடும். ஒற்றுமை அதிகரிக்கும். 

இந்த பூஜையை தொடர்ந்து வீட்டில் செய்துவரும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உங்களையே அறியாமல் உங்களுடைய மனப்பக்குவம் மாறி, விட்டுக்கொடுக்கும் தன்மை ஏற்பட்டு, கிரக சூழ்நிலைகள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட அது சரியாகி கணவன், மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். 

வாரந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் மா இலையை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்களுக்கு பிரச்சனை தீரும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் கூட உங்கள் வீட்டு பூஜையறையில், செவ்வாய்க்கிழமைகளில் இப்படி வழிபாடு செய்து வருபவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கூட, அது பிரிவை உண்டாக்காது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife problem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal