நடுக்கடலில் மனைவியுடன் உற்சாக கொண்டாட்டம்.. இறுதியில் அரங்கேறிய சோகம்..!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மார்ட்டின் என்பவர் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மறக்க முடியாத சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தார். எனவே 44 வயதான ரிச்சர்ட் மனைவியின் பிறந்த நாளை நடுக்கடலில் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.

தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதற்காக தன்னுடைய மனைவியுடன் இணைந்து இந்திய பெருங்கடலில் இருக்கும் ரீ யூனியன் தீவுக்கு சென்றுள்ளார். பிறந்தநாள் ஏற்பாடுகளை செய்துவிட்டு அதன் பின்னர் கடலில் நீச்சல் அடிக்க சென்றுள்ளார். கடலில் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருப்பதை அவருடைய மனைவி உற்சாகமாக ரசித்துக் கொண்டிருந்தார்.

Image result for beach  seithipunal

அதன் பின்னர் சிறிது நேரத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை காணவில்லை. எனவே, பதட்டமாகி காவல்துறைக்கு இது குறித்து தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ரிச்சர்டின் உடலை அங்கிருக்கும் நான்கு சுறா மீன்கள் உணவாக சாப்பிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

ரிச்சர்டின் திருமண மோதிரம் இருந்த கைகள் ஒரு சுறாவின் உடலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் தானா என்பதை கண்டறிய மற்ற சுராக்களின் வயிற்றிலிருந்த உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

death in sea re union


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->