பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு.. முதலமைச்சர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதி முர்முவுக்கு தமிழகத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்சி, எஸ்டி, பிசி மற்றும் சிறுபான்மையினர்  சமூகத்தினருக்கு ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். 

கடந்த 3 ஆண்டுகளாக இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆகையால், குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். இன்று மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதால், வேட்புமனு தாக்கலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்கவில்லை. பதிலாக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் கட்சியின் பாராளுமன்ற விவகாரங்கள் பிரிவு தலைவர்களான விஜய்சாய் ரெட்டி மற்றும் மக்களவை உறுப்பினர் மிதுன் ரெட்டி ஆகியோர் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ys jagan mohan reddy support draupadi murmu


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->