இது ஆன்மிக பூமிதான்! ஆன்மிகம் பேசாமல் அரசியல் நடத்த முடியாது! - தமிழிசை சவுந்தரராஜன்! - Seithipunal
Seithipunal


இன்று பழனியில் நடக்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்துப் பேசினாலும், ஆன்மிகத்தைப் பேசாமல் அரசியல் செய்ய முடியாது என்பதை இந்த முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது.

தமிழக அரசே ஆன்மிக மாநாடு நடத்துவது தமிழகம் ஆன்மிகத்தின் பக்கம்தான் என்பதை காட்டுகின்றது. ஆன்மிகத்தை விடுத்து அரசியல் கிடையாது. அரசியலை விடுத்து ஆன்மிகம் கிடையாது என காந்தி கூறியது போல பெரியாரின் கொள்கையை பின்பற்றும் இவர்கள் அண்ணாவின் தமிழை பின்பற்றும் இவர்கள் ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும் என்பதை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

நடிகர் விஜயின் கட்சி கொடியில் இருப்பது வாகை மலரா தூங்குமூஞ்சி மரமா என எனக்கு தெரியவில்லை. யானை அவர்களுக்குச் சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் சொல்லி இருக்கிறார்கள். ஒரு சில கருத்துகளை சட்ட ரீதியாக  சொல்கிறார்கள். நடிகர் விஜய் சட்டரீதியாக அதில் தவறு இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எங்களுக்கும்,  திமுக - விற்கும் இடையில் பிணக்கமான கொள்கைதான். திமுகவுடன் கூட்டணி என்பதெல்லாம் நாணய விழாவோடு போய்விட்டது.

நாங்கள் இந்த தேர்தலில் எங்களுடைய வாக்கு வங்கியை செயலால் நிரூபித்து இருக்கிறோம். அந்த எண்ணிக்கையே பதில் சொல்லும்.

ஒரு பிரச்சனை நடந்த உடன்தான் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகள் எடுக்கிறது. போலியாக ஒருவர் என்சிசி கேம்ப் நடத்துகிறார். பாலியல் தொல்லை கொடுத்து குழந்தைகளை துன்புறுத்தி இருக்கின்றார். பள்ளிகல்வித்துறை இன்னும் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு எந்த குற்றம் சாட்டப்பட்டாலும் அதில் சில பேர் பலியாகி விடுகிறார்கள். எலி மருந்து சாப்பிடுகிறார்கள், விபத்தில் சிக்குகின்றனர். இது தொடர்பான உண்மை விசாரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You can't conduct politics without talking about spirituality Tamilisai Soundararajan


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->