மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 உயர்வு? கசிந்த ரகசிய தகவல்!மா.செக்களுக்கு போன ஸ்டாலின் உத்தரவு! நடக்கப்போவது என்ன!
Women rights amount Rs 2000 increase Leaked secret information Stalin order to go to the Chekas
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பெண்கள் மையப்படுத்தப்பட்ட ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ பரப்புரை இயக்கத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள வீடு வீடாகச் செல்லும் பரப்புரையை ஒருங்கிணைத்து, மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்துவதாகும். கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதிகள் போன்ற நலத்திட்டங்களை மக்களிடம் விளக்குவது இந்த இயக்கத்தின் மையக்கருவாக உள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பத்து பெண்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தொகுதி வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 23 முதல் இக்குழுக்கள் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை விளக்க உள்ளன. உலக மகளிர் தினமான மார்ச் 8க்குள் மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளை சென்றடைவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 வழங்கப்பட்டு மொத்தம் ரூ.5,000 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்தத் தொகை மாதந்தோறும் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியும் பரப்புரையில் வலியுறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியான செயல்திட்டங்கள், பரப்புரை நடைமுறைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு பெண்கள் வாக்காளர்களை மையமாகக் கொண்ட இந்த இயக்கம் திமுகவின் முக்கிய பிரச்சார ஆயுதமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Women rights amount Rs 2000 increase Leaked secret information Stalin order to go to the Chekas