விண்வெளி கனவுக்கு வெற்றிச் சிறகு...! ககன்யான் வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் சோதனை சாதனை...! - Seithipunal
Seithipunal


மனிதர்களை விண்வெளிக்குக் கொண்டு சென்று மீண்டும் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி அழைத்து வருவது என்ற இலக்குடன் செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘ககன்யான்’ திட்டம், நாட்டின் மிகப்பெரிய அறிவியல் கனவாகக் கருதப்படுகிறது.

இந்தியாவை மனித விண்வெளிப் பயணத்தில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சி, பல கட்ட தொழில்நுட்ப சோதனைகள் மூலம் தீவிரமாக முன்னேறி வருகிறது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு குரூப் கேப்டன்கள் விண்வெளி வீரர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை விண்வெளிப் பயணத்திற்குத் தயார்படுத்த கடுமையான பயிற்சிகளும், பாதுகாப்பு சோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில், சண்டிகார் நகரில் செயல்படும் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகம் வளாகத்தில் அமைந்துள்ள ‘ரெயில் டிராக் ராக்கெட் ஸ்லெட்’ வசதியில், விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரையிறக்க உதவும் பாராசூட் அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனை, அவசர சூழ்நிலையிலும் விண்வெளி வீரர்கள் சேதமின்றி தரையிறங்க முடியும் என்பதைக் உறுதி செய்த முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.மேலும், ககன்யான் திட்டத்தின் பாதுகாப்பு வலையை மேலும் பலப்படுத்திய இந்த வெற்றி, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண கனவுக்கு புதிய நம்பிக்கையையும் வேகத்தையும் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parachute test to safely land Gaganyaan astronauts successful


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->