தவெக அமைச்சரவையில் இடம் பெறும் 2 காங்கிரஸ் அமைச்சர்கள் யார்? கதர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டி? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கும் அமைச்சரவைப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் சார்பில் இரண்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியாக ஆதரவு வழங்கியது. மேலும் எதிர்கால தேர்தல்களிலும் தவெகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது.

தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், கட்சி தொடங்கிய காலத்திலிருந்தே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்று கூறி வந்தார். அதன்படி தற்போது காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த 5 எம்எல்ஏக்களில் இருவரை அமைச்சர்களாக தேர்வு செய்வது குறித்து தவெக தலைமை மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையே ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அதில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு முக்கியமான அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகளும், வழக்கறிஞர் அணியும் ராஜேஷ்குமாருக்கு அமைச்சரவைப் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மற்றொரு அமைச்சர் பதவிக்காக மேலூர் தொகுதி எம்எல்ஏ விஸ்வநாதன் மற்றும் குளச்சல் தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மறைந்த முன்னாள் எம்எல்ஏ முரளீதரனின் குடும்பத்திற்கும் அமைச்சரவைப் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் காங்கிரஸ் தரப்பில் எழுந்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்குள் அமைச்சர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைமையிலான அமைச்சரவையின் அடுத்த கட்ட விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக யார் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Who are the 2 Congress ministers who will be in the Tvk cabinet Is there a rivalry between the Kathirs


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->