வரலாற்றில் இன்று ! அக்டோபர் 23 : இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்!!!
வரலாற்றில் இன்று ! அக்டோபர் 23 : இன்றைய நாளின் முக்கிய நிகழ்வுகள்!!!
சிந்தனை:
'தயங்குபவர்களுக்கும்... பயப்படுபவர்களுக்கும்... யோசிப்பவர்களுக்கும்... இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை... துணிவும், முயற்சியும்தான் வெற்றியின் முதற்படி...

கிட்டூர் ராணி சென்னம்மா : இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த கிட்டூர் ராணி சென்னம்மா 1778ஆம் ஆண்டு இதே நாளான அக்டோபர் 23ஆம் தேதி கர்நாடகத்தில் பெல்காம் அருகே உள்ள ககதி கிராமத்தில் பிறந்தார்.
அரவிந்த் அடிகா : சிறப்பான மொழித்திறமையும், எழுத்துத்திறமையும் ஒருங்கே பெற்ற அரவிந்த் அடிகா 1974ஆம் ஆண்டு இதே நாளான அக்டோபர் 23ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் 1990-ல் நடந்த SSLC தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். இவரது முதல் புதினம் தி ஒயிட் டைகர் 2008-ல் மேன் புக்கர் பரிசு பெற்றது.

முக்கிய நிகழ்வுகள்:
1920ஆம் ஆண்டு இதே நாளான அக்டோபர் 23 ல் சூறாவளி காற்றின் வலிமையை அளவிடும் (ஃபுஜிதா அளவீடு) நுட்பத்தைக் கண்டறிந்த ஃபுஜிதா டெட்சுயா ஜப்பானில் பிறந்தார்.
1911ஆம் ஆண்டு இதே நாளான அக்டோபர் 23 ல் முதல்முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது.