'நிவாரணம் குறித்து பேச என்ன தகுதி இருக்கு...?' -எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான வார்த்தை பாய்ச்சிய அமைச்சர் சேகர்பாபு
What right do you have talk about relief Minister Sekarbabu slams Edappadi Palaniswami
கோயம்பேட்டில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ததையடுத்து, அமைச்சர் சேகர்பாபு பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தீவிரமாக தெரிவித்ததாவது,"எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும் கட்சியாக இருந்தபோதும் எவ்வாறு செயல்பட்டார் என்பதை தமிழக மக்கள் நன்கு நினைவில் வைத்திருக்கிறார்கள்.

இதில் ஆளும் கட்சியாக இருந்தபோது, மக்களிடையே செல்லாமலே கால் கூட தரையைத் தொடாதபடி ஆட்சி செய்தவர்.ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கூட, கொரோனா எனும் உயிர்க்கொல்லி தாக்கிய காலத்தில், பலர் தங்கள் வீடுகளுக்குள் பூட்டிக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய முதல்வர் தான் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களுடன் களத்தில் இறங்கி, தொற்றை வென்று காட்டியவர்.எனவே, நிவாரணப் பணிகள் குறித்து பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை” என அமைச்சர் கடுமையாக சாடினார்.
English Summary
What right do you have talk about relief Minister Sekarbabu slams Edappadi Palaniswami