சத்தியமூர்த்தி பவனில் மயங்கி விழுந்த கிரிஷ் சோடங்கர்; செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன..?
What did Girish Chodankar who fainted at Sathyamurthy Bhavan say at the press conference
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியும் தயார் நிலையில் இருப்பதாக அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த சக நிர்வாகிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவர் உடல்நலம் தேறியதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கிரிஷ் சோடங்கர் விமான நிலையம் சென்றடைந்தார். அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், உடல்நிலை குறித்து கூறுகையில்;
''சத்தியமூர்த்தி பவனின் படிகளில் இருந்து அவசரமாக இறங்கும்போது, திடீரென கால் தடுமாறி இடறிவிட்டேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன். என் கட்சித் தொண்டர்கள் என் மீது அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
இதேநேரம், திமுகவுடன் கூட்டணி அமைந்ததால் ராகுல் காந்தி மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
English Summary
What did Girish Chodankar who fainted at Sathyamurthy Bhavan say at the press conference