கட்சி மாறி தப்பு பண்ணிட்டோம்! தவெகவில் பதவி கிடைக்காமல் தவிக்கும் முன்னாள் அதிமுக புள்ளிகள்!தவெகவில் என்ன நடக்கிறது? - Seithipunal
Seithipunal


முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), அண்மையில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இதுவரை முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாதது குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதம் எழுந்துள்ளது. இதனால், கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தவெகவில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்ததுடன், முன்னாள் எம்.பி. மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு ஏராளமான மூத்த தலைவர்கள் கட்சியில் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மாநில, மண்டல அல்லது மாவட்ட அளவிலான நிர்வாகப் பொறுப்புகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், புதியதாக இணைந்த சில தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், அதிமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்த தலைவர்கள், தற்போது தவெகவில் சாதாரண உறுப்பினர்களைப் போல செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கும் நிகழ்வுகளிலும் தங்களுக்கு எதிர்பார்த்த அளவிலான பங்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தும் சிலர் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த மேலும் சில முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகவும், அவர்களை வரவேற்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரத்தில், புதியதாக கட்சியில் இணையும் தலைவர்கள் உடனடியாக முக்கிய பதவிகள் அல்லது உயர்நிலை பொறுப்புகளை எதிர்பார்க்கக் கூடாது என்ற தெளிவான நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதே முன்னுரிமை என்றும், பின்னர் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாதது அல்லது அதிருப்தி நிலவுவது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், தவெகவின் அடுத்தகட்ட நிர்வாக நியமனங்கள் எப்போது வெளியாகும், புதியதாக இணைந்த மூத்த தலைவர்களுக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்பதே தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனிக்கப்படும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We made a mistake by switching parties Former AIADMK bigwigs left in the lurch after failing to secure posts in TVK What is happening within TVK


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->