புதுச்சேரி யூனியன் பிரதேசம், கேரளம் மற்றும் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவு..! - Seithipunal
Seithipunal


கேரளம், அசாம் ஆகிய 02 மாநிலங்களிளிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று காலை தொடங்கிய சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 06 மணிக்கு முன்னதாக வாக்குசாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர். 

140 தொகுதிகள் உள்ள கேரளத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.71 கோடி ஆகும். இந்த தேர்தலில் 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி வாக்குப்பதிவுக்கான உபகரணங்கள் நேற்று விநியோகம் செய்யப்பட்டன. தேர்தல் அதிகாரிகள் இவற்றுடன் நேற்று வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்றனர். 

இன்று பரபரப்பான சூழ்நிலையில் காலை 07 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குப்பதிவு மையங்களில் காலை 07 மணிக்கு முன்பே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

அதேப்போல வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அசாமில் தொடர்ந்து 03வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களம் காண்கிறது. 126 தொகுதிகள் உள்ள அசாமில் காங்கிரஸ் அதிகபட்சமாக 99 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பாஜ 90 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 14 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜ 07 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மாநில தேர்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 59 பேர் பெண்கள் என மொத்த 2.50 கோடி பேர் வாக்காளர்கள். 31,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில், சட்டவிரோத குடியேற்றம் தடுப்பு, தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை, பொது சிவில் சட்ட வாக்குறுதி போன்ற விவகாரங்களை பாஜவும், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வெறுப்புணர்வு அரசியல் போன்ற பிரனைகளை காங்கிரசும் பிரசாரத்தில் முன்வைத்தன. 

அடுத்ததாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 30 தொகுதிகளுக்கான 16-வது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கி முடிவடைந்துள்ளது. இங்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிகள் இணைந்த தேஜ கூட்டணியும், காங்கிரஸ், திமுக, விசிக இணைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் என 04 முனை போட்டி நிலவுகிறது. 

இதில், தேசிய கட்சி வேட்பாளர்கள் 34 பேர், மாநில கட்சி வேட்பாளர்கள் 63 பேர், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்கள் 80 பேர், சுயேச்சைகள் 117 பேர் என மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 30 சட்டமன்ற தொகுதிகளில் உழவர்கரை, நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, நெட்டபாக்கம் ஆகிய தொகுதிகளில் அதிகபட்சமாக 14 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக ஊசுடு தொகுதியில் 05 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9,50,639. இதில், ஆண்கள் - 4,46,667, பெண்கள் - 5,03,832 மூன்றாம் பாலித்தனவர்கள் -140 என தேர்தல் துறை இறுதிவாக்காளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், 30 சட்டமன்ற தொகுதிகளில் 1,099 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு 1,099 விவிபேட் மற்றும் இவிஎம் இயந்திரங்கள் தயாராக வைக்கப்பட்டது.
இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 04-ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voting for the Legislative Assembly elections in Puducherry Kerala and Assam has concluded


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->