வாக்காளர் திருத்தம் சர்ச்சை தீவிரம்...! ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் – த.வெ.க. பங்கேற்பு இல்லை! - Seithipunal
Seithipunal


தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழ்நாட்டில் வீடு தோறும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ளது.

இந்த தீவிர வாக்காளர் திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மறுபுறம், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இதை வரவேற்றுள்ளன.இதனையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தியாகராய நகரில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக நடைபெறும் இந்த கூட்டத்தில் மொத்தம் 60 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதுபோல், தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) இந்த கூட்டத்தில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், த.வெ.க. பங்கேற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

“இது தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கூட்டமாக இருந்தால் நாங்கள் பங்கேற்றிருப்போம்; ஆனால், இது தி.மு.க. சார்பில் நடத்தப்படும் கூட்டம் என்பதால் பங்கேற்பது பொருத்தமல்ல,” என த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, முன்னதாக தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் த.வெ.க. பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Voter revision controversy intensifies All party meeting today under leadership Stalin TVK No participation


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->