பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது-சசிகலா. - Seithipunal
Seithipunal


தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

சசிகலா தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட முடிவு செய்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது:- எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை 3-வது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசு தோல் போர்த்திய புலிகளின் கையில் சிக்கி அதிமுக சின்னாபின்னமாகி வருகிறது.

 தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது. அதிமுகவில் நடப்பதை பார்த்து திமுகவினர் ஆனந்தமாக உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது?. அதிமுக சட்டவிதிகளை மாற்ற யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது? என்று சசிகலா பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VK sasikala speech about ADMK issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->