இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகிய முன்னாள் திமுக நிர்வாகி மீது குண்டாஸ்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு சிறுவர்கள், திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும், மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 சிறுவர்களிடமும் போலிஸ்ற் விசாரணை மேற்கொண்டனர்..

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சிபிசிஐடி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக ஹரிஹரன் மற்றும் ஜூனத்அகமது ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

viruthunagar young ladye abuse case issue april 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->