விராலிமலை தொகுதியில் பரபரப்பு.. வாக்கு சாவடியில் இருந்த பேப்பர்.! அதிர்ச்சியில் திமுக, அமமுகவினர்.! - Seithipunal
Seithipunal


விராலிமலை தொகுதி கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அங்கு கடந்த இரண்டு முறையாக போட்டியிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது  மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். 

இந்நிலையில், விராலிமலை தொகுதி மாத்தூர் பகுதியில் உள்ள 27வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய சீல் பேப்பர் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்தது. இது திமுக, அமமுக வேட்பாளருக்கு, பூத் ஏஜெண்டுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகப்பட்ட அவர்கள், இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் இடம்  புகார் அளித்தனர். இது குறித்து விளக்கமளித்த மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் ஏஜெண்டுகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்குச்சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து அதன் மீது ஏஜெண்டுகளின் கையெழுத்துகளுடன் கூடிய பேப்பர் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும். 

இந்த பேப்பர் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும் வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறினார். ஆனாலும் இதை ஏற்க மறுத்த திமுக, அமமுகவினர் உடனே வாக்கு இயந்திரங்கள் இருக்கும் அறைக்கு சென்று அவரிடம் வாக்குப்பதிவு எந்திரங்களை காட்டிய பிறகு சமாதானம் ஆனார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

viralimalai constituency issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->