தேமுதிக ஒன்றிய செயலாளருக்கு கத்திகுத்து.. கோபத்தில் கொந்தளிக்கும் விஜயகாந்த்.!!
vijayakanth statement on nov 23
தேமுதிக ஒன்றிய செயலாளர் கணேசன் சமூக விரோதிகள் தாக்கப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தேமுதிக ஒன்றிய செயலாளர் கணேசன் சமூக விரோதிகள் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது.
எந்த பிரச்சனையாக இருந்தாலும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சட்டத்தை கையில் எடுத்து தனிநபர் மீது தாக்குதல் நடத்துவது என்பது தவறானது.

ஒன்றிய செயலாளர் கணேசனை கத்தியால் குத்திய சமூக விரோதிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன், விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
English Summary
vijayakanth statement on nov 23